அகழாய்வில் முத்திரை நாணயம்.. தமிழக அரசு கம்பீரத்தோடு அறிவித்திருக்கிறது – சு.வெங்கடேசன்

Default Image

அகழாய்வில் 11 முத்திரை நாணயங்கள் கிடைத்ததை இன்று வரை மத்திய அரசு வெளியிடவில்லை என சு.வெங்கடேசன் குற்றசாட்டு.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அகழாய்வு நடைபெறும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி நாகரிகம் கி.மு.6 நூற்றாண்டு நாகரிகம் என தெரியவந்துள்ளது. கொற்கை துறைமுகம் கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கீழடி அகழாய்வுகளில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கேரளாவின் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கீழடி அகழாய்வு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. நெல்லை நகரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

கீழடியில் கண்டறியப்பட்ட வெள்ளி முத்திரை நாணயம் மெளரியர் பேரரசர் அசோகர் காலத்துக்கு முந்தையது என்றும் கிமு 4-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது, சூரியன், நிலவு வடிவில் குறியீடுகளை கொண்ட வெள்ளிக்காசுகள் எனவும் தெரிவித்தார். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் துவங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்று தெரிவித்தார். கீழடி குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், கீழடியில் ASI நடத்திய அகழாய்வில் 11 முத்திரை நாணயங்கள் கிடைத்தன. அதன் ஆய்வு முடிவை இன்று வரை மத்திய அரசு வெளியிடவில்லை. கடந்த ஆண்டு ஆய்வில் ஒரு முத்திரை நாணயம் கிடைத்தது. அதன் ஆய்வு முடிவை தமிழக அரசு கம்பீரத்தோடு அறிவித்திருக்கிறது. இதுவும் இருவேறு நாகரிகத்தின் வெளிப்பாடுதான் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்