பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Published by
Castro Murugan

மக்கள் பணியாளர்களுக்கு எதிராக  சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது 

கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஓய்வறியாது உழைத்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பொருளாதார மீட்பு முயற்சிகளையும், சிறந்த நிர்வாக நேர்த்தியால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின்  அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதைக் கண்டு கதிகலங்கி வரும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடி மறுவாழ்வு பெறும் நோக்கத்தோடு, கீழ்த்தரமான பொய்ப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதைக் கண்டு, தமிழ்நாடு மக்கள் எள்ளி நகையாடுவதை சமூக ஊடகங்களின் நடுநிலையாளர் கருத்துரைகளிலும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

உலகநாடுகள் ஓவ்வொன்றும் கொரோனாவின் கடும்தாக்குதலால் நிலைகுலைந்து நிற்கும் நேரமிது வல்லரசு நாடுகளும் ,பொருளாதார வளமிகுந்த நாடுகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன .தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடுத்த சரியான நடவடிக்கைகள் காரணமாக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது .தமிழ்நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பு சிறப்பாக செயல்படுவதால்  60 விழுக்காடு மக்கள் குணமடைந்து வருகின்றனர் .

தொலைநோக்குப் பார்வை யோடு எதிர்கால தமிழகத்தின் நலனுக்காக ஏராளமான பணிகளில் முதல்வர் இரவு, பகலாக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண் டிருக்கிறார்.மக்களுக்கு என்னென்ன வசதிகளை செய்துதர முடியுமோ அவை அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்து கொண்டிருக்கிறது.

அவரின் சிறப்பை, தாங்க முடியாமல் மு.க.ஸ்டாலின் மனம் குமுறுகிறார். மதிமயங்கி பொய்யையும், புரட்டையும் பரப்ப முயற்சிக்கிறார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சிகள் நிச்சயம் பலிக்காது.

தமிழகத்தில் முதல்வரின் செயல்திறனாலும், விஸ்வரூப வளர்ச்சியாலும், தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை மு.க.ஸ்டாலின் பெற இயலாமல், முதல்வரின் செயல்பாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல், எதிர்க்க இயலாத நிலையில் தமிழகத்தின் நலன்களை புறக்கணித்து, கோவை மாவட்ட அளவில் போராட்டம் நடத்திட 5 மணி நேரம் திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோ சனை செய்து, மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேரிடர் காலத்திலும், சாதாரண எளியோனான என்னை எதிர்த்து போராட்டங்களைத் தூண்டிவிடுவது, வேடிக்கையாகவும், விந்தை யாகவும் இருக்கிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

Recent Posts

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

18 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

47 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago