தானும் செய்யமாட்டேன், மற்றவர்களும் செய்யக் கூடாது என்று அரசின் உத்தரவு குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படும் சூழல் நிலவுகிறது. பொதுமக்களிடம் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தன்னார்வாளர்கள் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்தனர். இதனால், பல்வேறு இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார்கள் வந்தன.
இதனை அடுத்து தமிழக அரசு, ‘ இனி தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் நிவாரண பொருட்களை வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிவாரண பொருட்கள் வழங்க விருப்பமானவர்கள் நிதியுதவியை அரசின் நிவாரண உதவி வங்கி கணக்கிற்கோ , பொருளதவியாக கொடுக்க நினைப்பவர்கள் பெரு மாநகராட்சி ஆணையர்களிடமோ அல்லது அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடமோ கொடுக்கலாம் என்று அறிவித்தது . இதனை மீறுபவர்கள் ஊரடங்கை மீறியதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,ஊரடங்கு உத்தரவு காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது. தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்! இது ஜனநாயக நாடு. உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்.கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…