தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களத்தை மீண்டும் அமைத்திட வேண்டாம்-ஸ்டாலின் அறிக்கை

ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தினால் போதும் என்ற ரயில்வேயின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தினால் போதும் என்ற ரயில்வேயின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல – ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வுகளில் தமிழ்மொழியை புறக்கணிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களத்தை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.