ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம்…!முதலமைச்சர் பழனிச்சாமி
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம் என்று முதலமைச்சர் பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் .ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல் தொடர்பாக என்று முதலமைச்சர் பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம். கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகே யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியும் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.