தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு …!முதலில் ஸ்டாலின் சந்திப்பு …!அடுத்து தினகரனுடன் சந்திப்பு ..!கருணாஸின் முக்கிய நகர்வு

Default Image

தினகரனுடன் எம்.எல்.ஏ கருணாஸ் திடீரென்று சந்தித்துள்ளார்.
இதேபோல்எம்.எல்.ஏ கருணாஸ் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களை அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். 
Image result for ஸ்டாலின்  கருணாஸ்
எம்.எல்.ஏ கருணாஸ் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது :சபாநாயகர் ஒரு தராசு மாதிரி நடுநிலையாக நடக்கவேண்டியவர் ஒருதலை பட்சமாக நடக்கின்றார்.நான் என்னுடைய தனிநபர் தீர்மானத்தை கொடுத்துள்ளேன்.சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய சொல்லி கொடுத்துள்ளேன் அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.என்னை பொறுத்த வரை ஊடகங்களும் சரி , பொது மக்களும் சரி பரவலாக என்னை திமுக தலைவர் முக.ஸ்டாலின் , TTV தினகரன் அவர்கள் இயக்குவதாக சொல்கிறார்கள். என்னை பொறுத்தவரை என்னையும் , என் இனத்தையும் இயக்கக்கூடிய ஒரு தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் மட்டும் தான்.
நான் சபாநாயகரிடம் என்னுடைய நியாயம் கேட்டு விளக்கம் கொடுத்துள்ளேன்.என் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நான் தப்பு செய்யவில்லை , நீங்கள் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.துணை முதல்வர் OPS சார்ந்த 11 MLA மீது ஒரு நடவடிக்கையும் , TTV தினகரன் அணியை சார்ந்த 18 MLA மீது ஒரு நடவடிக்கையும் நீங்கள் எடுத்துள்ளீர்கள்.அதே போல என் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கும் விதமாக செயல்படுவதாய் எனக்கு தோணுது என்று கோரி என்னுடைய தனியுரிமை கோரிக்கையை வைத்துள்ளேன்.நான் அடுத்து TTV தினகரன் அவர்களையும் , விஜயகாந்த் அவர்களையும் , திருநாவுக்கரசர் என எல்லா தலைவர்களையும் சந்திக்க உள்ளேன் என்று எம்.எல்.ஏ கருணாஸ் கூறினார்.
அதன்படி சென்னை அடையாறு வீட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரனுடன், எம்.எல்.ஏ கருணாஸ் சந்தித்துள்ளார்.
Image result for தினகரன் கருணாஸ்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒரு ஆர்ப்பாட்டத்தில் நான் அடிப்பேன் என்ற பயணம் தமிழக முதல்வருக்கு உண்டு என்று கருணாஸ் பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து , சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்த நடிகர் கருணாஸ்சின் இந்த தீடீர் இரண்டு சந்திப்பு அரசியலில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai
INDWvsWIW
Eiffel Tower fire