சென்னை : அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை சார்பில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளைப் பாராட்டிச் சான்றிதழ் மற்றும் மடிக்கணிணிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நம் திராவிட மாடல் அரசு தொடங்கிய புரட்சிகரமான புதுமைப்பெண் திட்டத்தின் பயனாக கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்ந்திருக்கிறது.
ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் நமது மாணவர்கள் இன்று முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்கின்றனர். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17% அதிகரித்துள்ளது என்றார்.
தொடர்ந்து மேலும் பேசிய அவர், வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் ‘முதல் பயண’ செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் சேரும்போது அவர்களுக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…