முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயார்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.இந்த நிலையில் அவரது வெளிநாட்டு பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார் .அப்பொழுது அவர் பேசுகையில்,ரூ. 2780 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது.அதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறன்..முதலமைச்சர் மட்டும் மொத்த முதலீட்டை கொண்டு வந்தால் திமுக அவருக்கு பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025