#BREAKING: ஸ்டாலின் 6-ம் கட்ட பிரசார பயண தேதி மாற்றம்..!
8-ம் தேதி தொடங்க இருந்த “உங்கள் தொகுதி ஸ்டாலின் ” என்ற 6-ஆம் கட்ட தேர்தல் பரப்புரை 12-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சிகளுடன் தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தி வருகிறது.
திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேர்காணல் செய்து வருகின்றனர். இந்நிலையில், 8-ம் தேதி தொடங்க இருந்த “உங்கள் தொகுதி ஸ்டாலின் ” என்ற 6-ஆம் கட்ட தேர்தல் பரப்புரை 12-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
12-ம் தேதி சேலம் கிழக்கில் இருந்து 6-ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கவுள்ளார்.