தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன்னர், தென் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி, இதற்காக ஒரு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைக்க முன்மொழிந்தார்.
அதன்படி, சென்னையில் மார்ச் 22ம் தேதி அன்று இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இன்று (ஏப்ரல் 2) முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாட்டின் கவலைகளை விளக்கி, பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து ஆலோசிக்க நேரம் கேட்டுள்ளார்.
இந்த சந்திப்பில், கூட்டு நடவடிக்கைக் குழுவின் தீர்மானங்களை மனுவாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தென் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கவும், நியாயமான மறுசீரமைப்புக்கு அழுத்தம் கொடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில், “ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வரும் அவரை, பல்வேறு கட்சிகளின் எம்பிக்களுடன் சந்தித்து தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனு அளிக்கவும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளக் கூடாது எனவும், கூட்டு நடவடிக்கை குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நேரில் வழங்க நேரம் ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளார்.
Hon’ble PM Thiru @NarendraModi,
I have requested a meeting with you, alongside MPs from various parties, to present our memorandum on the concerns surrounding the proposed delimitation. This follows resolutions from the #JointActionCommittee meeting for #FairDelimitation in… pic.twitter.com/kkSoqgNjmG— M.K.Stalin (@mkstalin) April 2, 2025