இனி ஸ்டாலின் வேல் குத்துவார், தீ மிதப்பார், எது வேண்டுமானாலும் செய்வார் – அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

Published by
பாலா கலியமூர்த்தி

தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர் முக ஸ்டாலின் வேல் கூட குத்துவார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூயிடம் நிபுணர்கள் கேட்ட கேள்விக்கு, ஸ்டாலின் எங்கெல்லாம் கிராம சபை கூட்டம் நடத்துகிறாரோ, அங்கெல்லாம் ஒருநாள் வேலைத்திட்டத்துக்கு மக்கள் யாரும் வேளைக்கு போறதில்லை. அங்குதான் 500 முதல் 1000 ரூபாய் மற்றும் சாப்பாடு கொடுப்பதால் மக்கள் அங்குதான் செல்கிறார்கள். அது தானா சேர்ந்த கூட்டமில்லை, கூட்டப்பட்ட கூட்டம் என்று குற்றசாட்டியுள்ளார்.

இதையடுத்து முக ஸ்டாலின் வெள்ளி வேலை பிடித்த புகைப்படத்தை குறித்து கேள்விகள் எழுபட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், தேர்தல் வந்துவிட்டது, அதனால் என்ன வேண்டுமானாலும் செய்வார். எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரே நோக்கம் முதலமைச்சர் நாற்காலியில் அமரவேண்டும் என்பதே. அதனால், ஸ்டாலின் வேல் குத்துவார், தீ கூட மிதப்பார். தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவாளவன் என பகல்வேஷம் போடுவார். இதுதான் அவருடையது என விமர்சனம் செய்துள்ளார்.

ஒரு எதிர்க்கட்சி தலைவர், அடுத்த முதல்வராக வேண்டும் என நினைப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஐய்யாவின் நினைவிடத்து வந்து அஞ்சலி செலுத்தும் போது கொடுத்த திருநீரை ஊதிவிட்டாரே இவரு இன்னைக்கு இறைவன் நம்பிக்கை உடையவன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? தமிழக மக்கள் ஏமாளிகளா? நிச்சியமாக இப்படிப்பட்ட கபட வேடதாரிகளை தமிழக மக்கள் ஒருபோதும் முதலமைச்சராக ஆக்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

1 hour ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

3 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

3 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

5 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

6 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

6 hours ago