திருவள்ளுவரை காவி உடையில் பதிவிட்ட பா.ஜ.கவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ளார்.நேற்று தாய்லாந்தில் அந்நாட்டு மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி .
இதனால் தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில்,திருவள்ளுவர் படத்தை காவி உடை, நெற்றியில் விபூதியுடன் பதிவிடப்பட்டது.மேலும் அந்த பதிவில்,
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்” …..என்ற குறலும்
அதனுடன் ,கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் திருவள்ளுவரை காவி உடையில் பதிவிட்ட பா.ஜ.கவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…