சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் – ஸ்டாலின் ட்வீட்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திருவள்ளுவரை காவி உடையில் பதிவிட்ட பா.ஜ.கவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ளார்.நேற்று தாய்லாந்தில் அந்நாட்டு மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி .
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?
அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் pic.twitter.com/xBeXs9aXHa
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2019
இதனால் தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில்,திருவள்ளுவர் படத்தை காவி உடை, நெற்றியில் விபூதியுடன் பதிவிடப்பட்டது.மேலும் அந்த பதிவில்,
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்” …..என்ற குறலும்
அதனுடன் ,கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!
எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும்.
சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!#BJPInsultsThiruvalluvar— M.K.Stalin (@mkstalin) November 3, 2019
இந்தநிலையில் திருவள்ளுவரை காவி உடையில் பதிவிட்ட பா.ஜ.கவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏழை மக்களின் 63 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
February 11, 2025![TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TN-CM-MK-Stalin.webp)
பரபரப்பான சூழலில் பிரான்ஸ் & அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!
February 10, 2025![modi france and us visit](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/modi-france-and-us-visit.webp)
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025![vijay prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vijay-prashant-kishor.webp)
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)