மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் – திமுக தலைவர் ஸ்டாலின்
இன்று மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வாரியம் அமைத்து கண்ணொளி திட்டம் முதல் மேற்படிப்பு வரை கட்டண சலுகை கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் பேணிக்காக்க கூடிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வாரியம் அமைத்து அவர்களுக்கு கண்ணொளி திட்டம் முதல் மேற்படிப்பில் முழு கட்டண சலுகை வரைக்கும் தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செய்து கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எனவும், திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தடையின்றி நிறைவேறும், இது மாற்றுத்திறனாளிகள் தினத்தில் தான் எடுக்கும் உறுதி எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தனி வாரியம் அமைத்து, கண்ணொளித் திட்டம் முதல் மேற்படிப்பில் முழுக் கட்டணச்சலுகை வரை தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செய்து கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!
திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தடையின்றி நிறைவேறும்! இது #DifferentlyAbledDay உறுதி! pic.twitter.com/p0JvaykzvJ
— M.K.Stalin (@mkstalin) December 3, 2020