திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததால் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது. கிரண் பேடியைக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைப் பறித்தது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் குதிரை பேரம் நடத்தினார்கள்.
தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை துணைநிலை ஆளுநரை நியமித்த போதே உள்நோக்கத்தை கண்டித்தேன். பாஜகவின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலை வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டில் அடிமை அதிமுகவை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவது போல, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திய முயற்சித்தால் நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும். ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக- காங்கிரஸ் கூட்டணியை மக்கள் மன்றம் சொல்லும் என தெரிவித்துள்ளார்.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…