வேலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முதல்வர் நடத்திய அரசு அலுவல் ஆய்வுக்கூட்டங்களில் திமுக MP & MLA -கள் புறக்கணிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது -ஸ்டாலின்
நேற்று முதல்வர் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த மனுவை அளிக்க சென்ற திமுக எம்.பி. செந்தில் குமாருக்கு அழைப்பிதழ் வழங்கவில்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தியதால் திமுக எம்.பி. செந்தில்குமார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒண்ட வெளியிட்டுள்ளார். அதில், அரசு விழா மற்றும் ஆய்வுக்கூட்டங்களில் திமுக MP & MLA -களை தொடர்ந்து புறக்கணித்துவரும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், முதல்வர் பழனிசாமி ஆய்வுக் கூட்டங்களில் திமுக எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியிருப்பது, ஜனநாயக விரோதம்,பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என திமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கேட்கவில்லை. அதிகரிக்கும் கொரோனா நோய் & கொரோனா மரணங்கள் தடுப்பு குறித்து அரசு செலவில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றுதான் கோருகிறார்கள். முதல்வராகி மூன்றாண்டுகள் ஆகியும், மக்களாட்சியின் அடிப்படை மற்றும் நிர்வாகத்தின் ஆரம்ப இலக்கணத்தைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்சத் திறன் கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…