உண்மைக்கு புறம்பாக முக ஸ்டாலின் பேசுகிறார் – முதல்வர்

எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் சொல்லியதைத்தான் நான் ரத்து செய்து வருவதாக பேசி வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசி வருவதாக முதல்வர் பழனிசாமி குற்றசாட்டியுள்ளார். அரசு அறிவிக்கவுள்ளதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ஸ்டாலின் அதை அறிவித்து விடுகிறார் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திமுக குரல் கொடுக்கவில்லை, தேர்தல் வந்த குரல் கொடுப்பார்கள் என விமர்சித்துள்ளார். மக்களுக்கு காலகட்டத்தில் உதவி செய்ய வேண்டுமோ அதை அந்தந்த காலத்தில் செய்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.