கிசான் முறைகேடு..! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்..ஸ்டாலின் வலியுறுத்தல்..!
தமிழகத்தில் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்.
பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் சேலம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் ரூ.110 கோடிக்கு முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. 6 லட்சம் போலி பயனாளிகள் சேருவதற்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிசான் நிதியுதவி திட்ட முறைகேட்டில் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வலியுறுத்தி உள்ளார்.