ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக பேச பழகிக்கொள்ள வேண்டும் இல்லையெனில் இரத்த அழுத்தம் அதிகரித்து அவரின் உடல்நிலை பாதிக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திமுக தலைவர் ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக பேச பழகிக் கொள்ள வேண்டும், இல்லையெனில் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை என்றும், முதலமைச்சரின் வெளிநாடு பயணம் என்பது முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக மட்டுமே. ஆனால், திமுகவினரின் வெளிநாட்டு பயணம் தான் சுய ஆதாயம் தேடும் பயணமாக இருந்துள்ளது.
வெளிநாட்டு பயணத்தில் துணை முதல்வர் கலந்து கொள்ளாததை பயன்படுத்தி எதிர்க் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம் .வெளிநாடு பயணம் வெற்றியடைய முதல்வரை அவரின் வீட்டிற்கே சென்று துணை முதல்வர் வாழ்த்தி தெரிவித்துவிட்டு வந்தார். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் .அதிமுக திமுகவை போன்ற கட்சி கிடையாது. எப்பொழுதும் மக்களுக்காகவே செயல்படும் கட்சி என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…