பாஜகவுக்கு ஸ்டாலின் உதவி செய்வதுபோல் தெரிகிறது…!தினகரன்
ஸ்டாலின், ராகுல் காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், அமமுக என்றைக்கும், அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை. 90 சதவீத அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். ஸ்டாலின், ராகுல் காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார்.
பாஜகவிற்கு எதிராக வலுவான அணி உருவாகக் கூடாது என்பதற்காக தான் ஸ்டாலின் இவ்வாறு செய்கிறார்.திமுக, பாஜக உடன் ரகசிய கூட்டணியில் இருக்கிறது.பாஜகவுக்கு ஸ்டாலின் உதவி செய்வதுபோல் தெரிகிறது என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.