7 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் திரும்ப பெற சபாநாயகருக்கு ஸ்டாலின் கோரிக்கை..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள்முதல் டெல்லி கலவரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு சபைகளையும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மக்களவை சபாநாயகரின் மேஜையில் இருந்த காகிதங்களை கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.இன்று மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை வருகின்ற 11-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025