மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
அதேபோல் மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்தில் சந்தித்தார்.
மேலும் பிப்ரவரி 22 ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.அப்போது விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்.இந்த சந்திப்புகள் அரசியலில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக தலைவர் ஸ்டாலின் கெஞ்சி கூத்தாடுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…