இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில், பொருளாதார ரீதியான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் திமுக, மதிமுக, விசக, காங்கிரஸ்,பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. அதிமுகவும், பாஜகவும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
திமுக, விசக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ்,பாமக உள்ளிட்ட கட்சிகள் 10 சதவீத இடஒதுக்கீடு எதிர்ப்பு தெரிவிக்க, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,” இட ஒதுக்கீடு சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட, கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களைத் தூக்கிவிடுவது,அது ஒன்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை,கல்வி மற்றும் சமூக ரீதியான இட ஒதுக்கீடு தான் சரி , மாதம் 66,000 சம்பாதிப்பவர்கள் எப்படி ஏழையாக இருக்க முடியும் ? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…