போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்
போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு , மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,லட்சக்கணக்கான ஏழை மக்களின் உயிர்நாடி – அரசு மருத்துவமனை மருத்துவர்கள்! அதனை உணர்ந்து, நான்கு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாக அழைத்துப் பேச முன்வர வேண்டும் .
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களும், ‘வேலை செய்ய மாட்டோம்’ என்ற போராட்ட முறையைக் கைவிட்டு, முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண முயற்சி செய்ய வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.