ஸ்டாலின் பாய்ச்சல் !தமிழக அரசு மத்திய அரசுக்கு துதிபாடுகிறது …..
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள தமிழக விருந்தினர் இல்லங்களின் பெயரில் தமிழ்நாடு என்பதை மாற்றினால் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், மற்ற மாநில அரசுகள், தங்கள் விருந்தினர் இல்லங்களுக்கு, அந்தந்த மாநிலங்களின் பெயரையே வைத்துள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் மாற்றி இருப்பது மத்திய அரசுக்கு துதி பாடுவதைக் காட்டுவதாகச் சாடினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.