திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த ஸ்டாலின்!
கொரோனா தோற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் நேற்றைய முன்தினம் அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஜெ.அன்பழகன் உடல்நிலை சிறுது முன்னேற்றம் அடைந்துள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக அவருக்கு 80% ஆக்சிஜன் வழங்கப்பட நிலையில், தற்போது 67% மட்டுமே தேவை என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். மேலும், நேற்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.