திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை நேற்று காலையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய போது ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, நாளை (அதாவது இன்று) திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது என ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது தலைமையில் நாளை(இன்று) காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள கூட்டத்தில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவது குறித்தும், காவல்துறை கைது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…