ஹிட்லரின் மறு உருவம் ஸ்டாலின்- ஜெயக்குமார்..!

கடந்த 21-ம் தேதி திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர், சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட மேலும் 2 வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் நேற்று ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு முன் திமுக நபரை தாக்கிய வழக்கு, சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுதலை செய்யப்பட்டார். அவரை முன்னாள் அமைச்சர் ,தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கட்சியை அழிக்க திமுக முயற்சி செய்கிறார்.
முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமே திமுக கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை. ஹிட்லரின் மறு உருவம் தான் ஸ்டாலின், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது என தெரிவித்தார்.