ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் – ராகுல் காந்தி
- நாகர்கோவிலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரசார கூட்டம் நடைபெற்றது.
- ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதில் திமுக -காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர்.கடந்த முறை 2 பக்கமும் பெரிய தலைவர்கள் இருந்தனர். ஆனால் இப்போது மாநில அரசை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
பிரதமர் மோடியின் திட்டங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கானது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கூட்டணி.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜி.எஸ்.டி விகிதம் மாற்றியமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.