முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள் – மு.க.ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் திமுகவை விமர்சிக்கிறார்கள். தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள் .
தமிழகத்தில் அதிமுக ஆட்சி,மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை.உலக முதலீட்டாளர்கள் யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை .தமிழக முதல்வர் வேலைவாய்ப்பு திட்டங்களை பொய்யாக அறிவித்து வருகிறார் என்று பேசினார்.