வருகின்ற 12-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தின் 3-ஆம் கட்ட பயணத்தை ஸ்டாலின் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தியது. கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் – சரிவுகள் – தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.பின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பிரச்சாரம் அறிவிக்கப்பட்டது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் மக்களிடம் விண்ணப்பம் தந்து பிரச்சனையை கேட்டு அறியப்படும் என்றும் விண்ணப்பத்தில் மக்கள் குறைகளை எழுதித் தந்தால் 100 நாள்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 28 முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.பிரச்சாரத்தில் மக்களின் குறைகளை விண்ணப்பங்களாக பெற்றார். பின்பு 2-ஆம் கட்டமாக பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று ராமநாதபுரத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 3-ஆம் கட்ட பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.வருகின்ற 12-ஆம் தேதி அன்று காலை விழுப்புரம் மாவட்டத்திலும், மதியம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் ,13-ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டத்திலும்,14-ஆம் தேதி காலை நாகை,தஞ்சை மாவட்டங்களிலும் ,மாலை திருவாரூர் ,நாகை மாவட்டங்களிலும் ,15-ஆம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டத்திலும் , மாலை அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…