வழக்கமாக கிராம சபை கூட்டம் வருடத்திற்கு 4 முறை நடைபெறும். இந்தக் கூட்டத்தின் போது அந்த கிராமங்களில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதை அரசுக்கு அனுப்பப்படும்.
இந்நிலையில், நேற்று தமிழக அரசு சார்பில் கொரோனா பரவலால் காரணமாக கிராம சபை கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூர் கிராமத்தில் தடையை மீறி கிராம சபை கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
கிராம மக்களிடம் சமூக இடைவெளியுடன் குறைகளை கேட்டறிந்தார்.இந்த கூட்டத்தில் 100 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் கூறுகையில், தடையை மீறி கூட்டம் நடத்தப்பட்டுள்ளதால் வழக்கு தொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப்பெறு என்ற வாசகம் அடங்கிய முக கவசம் அணிந்து உள்ளார்.
ஏற்கனவே திமுக சார்பில் விவசாயி சட்டங்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என அனைத்து திமுக சார்ந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை…