தூத்துக்குடியில் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று இருந்த ஸ்டாலின் அவர்களின் மனைவியிடம் மூதாட்டி ஒருவர் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வார்களா என கேள்வி எழுப்பியதற்கு ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கோவிலுக்கு வருவார் எனவும் துர்கா ஸ்டாலின் பதிலளித்து சென்றுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் களக்காடு பகுதியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் முடிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உடன் சென்று இருந்தவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். பின் அங்குள்ள நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கும் அவர் சென்றுள்ளார். தூத்துக்குடிக்கு வரும்போதெல்லாம் ஸ்டாலின் அடிக்கடி இந்த பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கமாம். அப்பொழுது அங்கு தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து கொண்டிருந்த 85 வயது மூதாட்டியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் நலம் விசாரித்துள்ளார்.
அப்பொழுது அவர் நீங்கள் யார் என கேட்டதற்கு அருகிலிருந்தவர்கள் இவர்கள்தான் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மனைவி எனக் கூறியுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி உங்கள் வீட்டிலுள்ளவர்கள் கோவிலுக்கு செல்வார்களா? பெருமாள் மீது நம்பிக்கை உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் பெருமாள் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை உள்ளது எனவும். அவர் கோவில்களுக்கு எல்லாம் வருவார் எனவும் பதிலளித்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…