ஆட்சியை கலைக்க முடியாததால், ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார்…! அமைச்சர் தங்கமணி
ஆட்சியை கலைக்க முடியாததால், ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், தூத்துக்குடி கலவரத்துக்கு வெளியாட்களே காரணம் .ஆனால் மக்கள் விருப்பத்தை ஏற்று ஆலை மூடப்பட்டது. தன் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார்.அதேபோல் இடைத் தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.