அரசியலில் ஸ்டாலின் ‘லாலிபாப் பேபியாக’ ஆகிவிட்டார் – அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலுக்கு பிறகு திமுக சிதறி போகும் என்றும் திமுகாவுக்குத்தான் இது கடைசி தேர்தல் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அப்போது, அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர், திமுகவை பொறுத்தளவில் கடைசி தேர்தல் இது.ஒரு குடும்பத்துடைய ஆதிக்கத்தை, அவர்களது கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.
தேர்தலுக்காக ஒவ்வொருவரும் அதை பொறுத்துக்கொண்டு மன உளைச்சலில் உள்ளார்கள். அது எப்போது வெடிக்கும் என்றால், பெரும் தோல்வியை திமுக சந்திக்கும் நேரத்தில் கண்டிப்பாக திமுக சிதறி போகும். அரசியலில் பக்குவப்படாத ஒரு சிறுபிள்ளை தனமாக இருப்பவர்கள் தான் லாலிபாப் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதுபோன்று தற்போது முக ஸ்டாலினை பொறுத்தளவில் லாலிபாப் பேபியாக அரசியலில் ஆகிவிட்டார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025