பொள்ளாச்சி பாலியல் கொடுமை: அரசாணை குறித்து ஸ்டாலின் கண்டனம்!!
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி பெண்களை காதல் மற்றும் நட்பு வலையில் வீழ்த்தி பணம் நகை பறிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த கும்பலில் நான்கு நபர்களை சில தினங்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்தது.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் இக்கும்பலில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் திருநாவுக்கரசு கைதாவதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்று பல அரசியல் பிரபலங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரையும் நாம் எப்பாடுபட்டாவது வெளியே கொண்டு வருவேன் என்றும் பேசியிருந்தார்.
கைது செய்யப்பட்டு அவர்களின் செல்போன்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றியது காவல்துறை.
ஆளுங்கட்சியின் மேல் தொடர்ந்து புகார் வைக்கப்பட்டாலும் எங்களுக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ந்து மறுத்துக் கொண்டே வருகிறது ஆளுங்கட்சி தரப்பு.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தலைவர் ரேகா சர்மா தமிழ்நாடு டிஜிபி டி கே ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விசாரணையை துரிதப்படுத்தி விரைவில் நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் எதிரொலியாக, வழக்கை சிபிஐக்கு மாற்றி, விசாரணையை துரிதப்படுத்தவும் இந்த கொடுங்குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறியவும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
அரசு வெளியிட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, அரசனை பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம். இது மற்ற பாதிக்கப்பட்ட பெண்களையும் முன்வந்து புகார் கொடுக்க விடாமல் செய்யும் செயலுக்கு ஒப்பானது.
பின்னணியில் இருந்து கொண்டு அதிமுக நடத்தும் கபட நாடகம் இது.