சட்டசபையில் வெளிநடப்பு செய்தது ஏன் என்று விளக்கம்!
ஆளுநர் ஆய்வை வரவேற்கும் தமிழக அரசின் நடவடிக்கை வேதனை அளிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரும்பானமையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாததால் வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.பெரும்பான்மை இல்லாமல் அ.தி.மு.க அரசு நீடிப்பதை ஆளுநர் அனுமதிப்பதாக எனவும் குற்றச்சாட்டு.அ.தி.மு.க அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும்.
பெரும்பான்மை இல்லாத அரசின் கொள்கைகளை உரையாக ஆளுநர் வாசிப்பது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் எனவும் அ.தி.மு.க அரசுக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதும் மக்களாட்சி தத்துவத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார் .
source: dinasuvadu.com