#BREAKING: திருமாவளவன் மீது வழக்கு-ஸ்டாலின் கண்டனம்..!

Default Image

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பலர தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ திருமாவளவன் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறினார்.

இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பகைமையை உருவாக்குதல், மத உணர்வை புண்படுத்தும் சொற்களை சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருமாவளவன் மீது வழக்குபதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தொல் திருமாவளவன் பேசியது குறித்து சமூக வலைதளங்களில் பரப்பி வன்முறையை தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

திருமாவளவன் கருத்தை திரித்து கூறியவர்கள் மீது வழக்குப்பதியாதது ஏன்.? திருமாவளவன் மீது வழக்கு காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை, பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை மேற்கோள்காட்டி திருமாவளவன் பேசினார். திருமாவளவன் மீதான பொய் வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்