மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. அதிலும் தலைநகர் சென்னை தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதைதொடர்ந்து தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.
ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், தமிழக அரசை கண்டித்து கருப்புச் சின்னம் அணிய வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து 5 பேர் வீட்டு வாசலில் 15-நிமிடம் எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக அரசுகளை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக , விடுதலைசிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கூட்டணி கட்சிகளை சார்ந்த தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…