புத்தகம் ஏன் கொடுக்கல..!குடிநீர்- கல்வி குறித்து கவலை இல்லாதவர் கையில் ஆட்சி ..! ஆதங்கத்தை கொட்டும் ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.இதனால் கடும் வறட்சி நிலவி வருகிறது.ஏரி,குளம்,அணைகள் என அனைத்தும் வற்றி வறண்டு போய்விட்டது.மக்கள் தண்ணீர் ,தண்ணீர் என்று கூக்குரல் எழுப்பி ஒரு குடம் தண்ணீயாவது கொடுங்க என்று தவித்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் தண்ணீர் பிரச்சனைக்கு நீங்க தான் காரணம்,என்ன நாங்க காரணமா..?அதற்கு நீங்க தான் காரணம் என்று மக்கள் தவிக்கும் பிரச்சனையை மறந்து தங்களுக்குள் சண்டை போட்டு வருகின்றனர்.மக்களோ முதல இந்த பிரச்சனைய தீர்த்து வைங்க அதற்கு பிறகு உங்க பிரச்சனைய பாருங்க என்று ஆதங்கத்தோடு சீறுகின்றனர்.
தண்ணீருக்கு தான் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றால் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பயில புத்தகம் இல்லாமல் இருக்கிறார்கள் இதனை கண்டித்து மு க ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாதவர் கையில் ஆட்சி சிக்கி உள்ளது என்று விமர்சித்து உள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில் பள்ளிகள் திறந்தும் 3, 4, 5-ம் வகுப்பு பாடப் புத்தகங்களை அனுப்ப இயலாத அரசாக தமிழக அரசு உள்ளது.குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாத ஆட்சி அதிமுக. வரும் காலங்களில் துரிதமாகச் செயல்பட்டு பாடப்புத்தகங்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.செய்யுமா.? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.