வக்ஃப் திருத்த மசோதா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் ஸ்டாலின் அறிவிப்பு.!

மக்களவையில் நேற்று வக்ஃப் வாரிய மசோதா நிறைவேறிய நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தஎம்எல்ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

TN Assembly - M K Stalin

சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இந்த மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடந்த நிலையில், இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து வருகை தந்தனர். மேலும், கருப்புப் பட்டை அணிந்து வந்த முதல்வர் ஸ்டாலின் நள்ளிரவு நேரத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, திரும்ப பெறு திரும்ப பெறு… வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறு.. என்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

பின்னர் பேரவையில் பேசிய மு.க. ஸ்டாலின், ”வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், பெரும்பாலான கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சட்டத்தை நிறைவேற்றியது கண்டனத்திற்குரியது. இது மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல் என சாடியதோடு, மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகள் விழுந்திருப்பது சாதாரணமானது அல்ல எனவும் விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும்” என்று அறிவித்துள்ளார்.

மேலும், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது மத்திய பாஜக அரசு. வக்ஃப் வாரியத்தின் தன்னாட்சியை அழித்து சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு போராடும்… போராடும்… போராடும்… அதில் வெற்றியும் பெறும். அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டப்பூர்வமாக தடுப்போம்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்