தமிழ் இடம்பெறவில்லை: போராட்டம் நடத்தப்படும் – ஸ்டாலின் அறிவிப்பு
அபராத ரசீதில் தமிழ் இடம்பெறவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழக போக்குவரத்து போலீசார் வழங்கிய அபராத ரசீதில், தமிழ் மொழி நீக்கப்பட்டு, இந்தி மற்றும் ஆங்கிலம் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் , அபராத ரசீதில் தமிழ் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரசீதியில் மீண்டும் தமிழ் இடம் பெறவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.