இளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலியை அறிமுகம் செய்யவுள்ளோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.பின் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது .மொத்தமாக கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
சென்னையில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இளைஞரணியில் 18 முதல் 35 வயது வரை உறுப்பினராக சேரலாம் என சில மாற்றங்களை செய்துள்ளோம். இளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலியை அறிமுகம் செய்யவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.