கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா..! 2500 பக்தர்கள் பயணம்..!
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து 2500 பக்தர்கள் பயணம்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் சொந்தமான புனித கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கச்சத்தீவு திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு குறைவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இலங்கை அரசு, மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த திருவிழா 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், 4-ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து 5,000 பேர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து 2500 பேர் கலந்துகொள்ள உள்ளதாக ராமேஸ்வரம் தேவாலய பங்குத்தந்தை தேவசகாயம் தெரிவித்துள்ளார்.