நாளை SSLC தேர்வு.. நெல்லையில் 91 மையங்களில் தேர்வெழுதும் 22 ஆயிரம் மாணவர்கள்!
நாளை எஸ்எஸ்சி தேர்வு தொடங்க உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மொத்தம் 12,639 பள்ளிகளை சேர்ந்த 9,76,089 மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத்தவுள்ளனர். நாளை தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழ்நாட்டில் 4,66,765 மாணவர்கள், 4,55,960 மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். புதுச்சேரியில் 7,911 மாணவர்கள், 7,655 மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் 37,798 பேரும், மாற்று திறனாளிகள் 13,151 பேரும் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
நெல்லை மாவட்ட நிலவரம்:
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழ்நாட்டில் 3,976, தனியார் பள்ளிகளில் 180 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 287 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாளை 10-ஆம் வகுப்புக்கு எஸ்எஸ்சி தேர்வு தொடங்க உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
கைதிகளுக்கு தனி மையம்:
அதாவது, நெல்லை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 2 மாணவர்கள், 11 ஆயிரத்து 895 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 91 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாளையக்கோட்டை மத்திய சிறையில் தேர்வு எழுதும் 12 சிறை கைதிகளுக்கு ஜெயில் வளாகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.