எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு: என்ஐஏவுக்கு மாற்றம்

Default Image

கன்னியாகுமரி களியக்காவிளை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (என்ஐஏ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து இந்த கொலையில் குமாரி மாவட்டத்தை சார்ந்த அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால் வழக்கு குறித்து 15 நாளில் மத்திய உள்துறைக்கு  தெரிவிக்கவேண்டும்.

இதற்கு இடையில் , நாகர்கோவில் நீதிமன்றம் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை 28 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி இருவரையும் 10 நாள்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி கொடுத்தது.

மேலும் இந்த வழக்கை என்.ஐ .ஏ க்கு  விசாரணைக்கு மாற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.இதனால் வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு  என்.ஐ .ஏ க்கு அனுப்பியது.இதைத்தொடர்ந்து வில்சன் கொலை வழக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பிருக்கலாம் என கூறப்படுவதால் விசாரணையை என்.ஐ .ஏ ஏற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வில்சன் கொலை வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (என்ஐஏ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்