எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கு: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது..!

எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 2 பேர் இளம் சிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் நேற்று அதிகாலை எஸ்எஸ்ஐ பூமிநாதன் ரோந்து பணியின்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மண்டல டிஐஜி சரவண சுந்தர், நவல்பட்டு குற்றவாளிகளை 4 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தோம். 3 பேரை கைது செய்துள்ளோம். அதில் 2 பேர் இளம் சிறார்கள். வழக்கில் தொடர்புடைய பொருட்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகள் நடக்கின்றன. தடயங்கள் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்துள்ளோம். செல்போனில் எஸ்எஸ்ஐ பேசிக்கொண்டு இருந்தபோது பின் பகுதியில் இருந்து சிறுவர்கள் தாக்கியுள்ளனர். மணிகண்டன்தான் (19) முக்கிய குற்றவாளி, அனைவரும் போதையில் இருந்துள்ளனர். இதற்கு முன் இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. காவலர்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
ஆதாரம் இல்லாமல் யாரையும் கொலைவழக்கில் கைது செய்யவில்லை. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இரவு நேரங்களில் இரண்டு, இரண்டு காவலர்களாக தான் இரவு ரோந்து பணிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025