#JUSTIN: புழலில் சீனிவாசன் தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புழலில் சீனிவாசன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.
திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் வாடகை கொடுத்து வசித்து வந்துள்ளார். பெயிண்டராக வேலைபார்த்துவந்த சீனிவாசனுக்கு கொரோனா ஊரடங்கினால் சரிவர வேலை இல்லாததால், வாடகை கொடுக்க முடியவில்லை.
இதுகுறித்து வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாம் சீனிவாசனை விசாரித்துள்ளார். அப்போது சீனிவாசனை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவமானம் தாங்க முடியாத சீனிவாசன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதனை அடுத்து உடலில் 85 சதவீத தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் இறப்பதற்கு முன் சீனிவாசன் கொடுத்த வாக்குமூலம் பெயரில் புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாமை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவுவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025