இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தணா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து இருதரப்பு குறித்து பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.இதில், தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள 3000 இலங்கை அகதிகளை அவர்களின் தாய்நாடான இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,அவர்களின் தாய்நாடான இலங்கை செல்ல விரும்பிய 3000 அகதிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், இன்னமும் சில மாதங்களில் அவர்கள் சொந்த ஊரான இலங்கைக்கு திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்கள் இடம்பெறாததையடுத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டிருந்த நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தணா இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த தகவலால் இலங்கை குடிமக்கள் தங்கள் தாய்நாடு செல்ல இருப்பது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…