இலங்கை தமிழர் விவகாரம் : வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் – அமைச்சர் ஜெயக்குமார்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர் .இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும் .
ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும், நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம்.எங்கள் மீது கல்லெறிந்தால், அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.